மதுர மரிக்கொழுந்து வாசம்


படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா




பச்சரிசி மாவிடிச்சி
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சி
பாவு வச்சி பாவு வச்சி
சுக்கிடிச்சி மௌகிடிச்சி
மௌகிடிச்சி மௌகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேணும் காக்க வேணும் டோய்.........


மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

(மதுர மரிக்கொழுந்து)

0 comments: