Showing posts with label பாடல் வரிகள். Show all posts
Showing posts with label பாடல் வரிகள். Show all posts

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ

படம் : அரங்கேற்ற வேளை
பாடல் : ஆகாய வெண்ணிலாவே!
பாடியவர் : கே.ஜே.ஜேசுதாஸ், உமா ரமணன்




ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல்
பூவாரம் சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று

பெண்:
தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று

ஆண்:
இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்

பெண்:
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்

ஆண்:
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட

பெண்:
நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

பெண்:
தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்

ஆண்:
வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்

பெண்:
அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?

ஆண்:
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன

பெண்:
இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட

ஆண்:
சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

ஆண்:
மலர் சூடும் கூந்தலே
மழைக் காலமேகமாய் கூட

பெண்:
உறவாடும் விழிகளே
இரு வெள்ளி மீன்களாய் ஆட

ஆண்:
ஆகாய வெண்ணிலாவே
தரை மீது வந்ததேனோ

பெண்:
அழகான ஆடை சூடி
அரங்கேறும் வேளைதானோ

கண்ணாலே காதல் கவிதை சொன்னாலே எனக்காக

பாடல் : கண்ணாலே காதல் கவிதை
திரைப்படம் : ஆத்மா
பாடகர்கள் : கே.ஜே.யேசுதாஸ், S.ஜானகி
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி



ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

(இசை) சரணம் - 1

பெண் : கடற்கரை தனில் நீயும் நானும்
உலவும் பொழுது

ஆண் : பறவையை போல் கானம் பாடி
பறக்கும் மனது

பெண் : இங்கு பாய்வது புது வெள்ளமே
இணை சேர்ந்தது இரு உள்ளமே

ஆண் : குளிர் வாடை தான் செந்தளிரிலே
இந்த வாலிபம் தன துணையிலே

பெண் : இளம் மேனி உன் வசமோ

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

(இசை) சரணம் - 2

பெண் : உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்

ஆண் : மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்

பெண் : வலையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று

ஆண் : நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு

பெண் : இன்ப ஊர்வலம் இதுவோ ?

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

பெண் : கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக

ஆண் : கண்ணாலே காதல் கவிதை
சொன்னாலே எனக்காக

கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

படம் : மௌனம் சம்மதம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா




கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா


தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா

பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா


உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா

என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா

கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

படம் : ராஜா கைய வச்சா
பாடல் : மழை வருது
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : சித்ரா, கே.ஜே.யேசுதாஸ்




மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே



இரவும் இல்லை

பகலும் இல்லை

இணைந்த கையில்

பிரிவும் இல்லை

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்
நதிகள் மீதும் நடந்து பார்ப்போம்

சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம்

உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா



மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே

மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே



கடந்த காலம்

மறந்து போவோம்

கரங்கள் சேர்த்து

நடந்து போவோம்

உலகமெங்கும் நமது ஆட்சி

நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி

உலகமெங்கும் அதற்கு சாட்சி

இளைய தென்றல் தாலாட்டு பாடும்

இனிய ராகம் கேட்போம் வா



வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா
மன்னா உன் பேர் அன்பிலே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா
மானே உன் மாராப்பிலே ஹோய்
மழை போல் நீயே.. பொழிந்தாய் தேனே

மழை வருது மழை வருது குடை கொண்டு வா

மானே உன் மாராப்பிலே ஹோய்

வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா

மன்னா உன் பேர் அன்பிலே

மதுர மரிக்கொழுந்து வாசம்


படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா




பச்சரிசி மாவிடிச்சி
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சி
பாவு வச்சி பாவு வச்சி
சுக்கிடிச்சி மௌகிடிச்சி
மௌகிடிச்சி மௌகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேணும் காக்க வேணும் டோய்.........


மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி

(மதுர மரிக்கொழுந்து)