திரைப்படம் - கோயில் புறா
இசை - இளையராஜா
வரிகள்- புலமைப் பித்தன்
பாடியவர்கள் - பி.சுசீலா, உமா ரமணன்
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தேனூறும் தேவாரம் இசைப்
பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே
தரணியிலே முதலிசையே
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
ஊன் மெழுகாய் உருகும் கரையும்
அதில் உலகம் மறந்து போகும்
பூங்குயிலே என்னோடு தமிழே
நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்
கலை பலவும் பயில வரும்
அறிவு வளம் பெருமை தரும்
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் கனவும் நினைவும் இசையே
இசையிருந்தால் மரணமேது
என் மனதில் தேன் பாய
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் சுகம் பல தரும் தமிழ்ப் பா
தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
Labels: இளையராஜா, உமா ரமணன், பி. சுசீலா, புலமைப்பித்தன்
திரைப்படம் : காவல்காரன்
பாடல் : நினைத்தேன் வந்தாய்
பாடகர்கள் : P.சுசீலா, TM. சௌந்தரராஜன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஒஹ்.....ஒஹ்...
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நூறு நிலாவை ஒரு நிலவாக்கி பாவை என்பேன்
ஆயிரம் மலரை ஒரு மலராக்கி பார்வை என்பேன்
பன்னீராக மானாக நின்றாடவொ
சொல் தேனாக பாலாக பண்பாடவொ
மாலை நேரம் வந்துறவாடவொ
மாலை நேரம் வந்துறவாடவொ
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
நிலைக் கண்ணாடிக் கன்னம் கண்டு ஆஹா..
மலர் கள்ளூறும் கிண்ணம் என்று ஒஹொ..
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனொடை பாய்கின்ற சொர்க்கம் வா
அது சிந்தாமல் கொள்ளாமல் பக்கம் வா
அன்பு தேனொடை பாய்கின்ற சொர்க்கம் வா
மன்னன் தொளொடு அள்ளிக் கொஞ்சும் பிள்ளை
அவன் தேரொடு பின்னி செல்லும் முல்லை
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன்
உந்தன் கை கொண்டு உண்ணாத கன்னித்தேன்
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
இடை நூலாடி செல்ல செல்ல ஆஹா
அதை மேலாடை மூடிக்கொள்ள ஒஹொ
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்க்கள் என்னென்ன
சின்னப் பூமேனி காணாத கண்ணென்ன
சொல்லித் தீராத இன்பங்க்கள் என்னென்ன
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
நினைத்தேன் வந்தாய் நூறு வயது
கேட்டேன் தந்தாய் ஆசை மனது
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
ஒஹ்..ஒஹ்..ஒஹ்..ஒய்ய்யா...
=============================================
நேயர் விருப்பம் பகுதியில் பழைய தமிழ் பாடல்கள் கேட்டிருந்த இனிய நண்பர் dglmskannan அவர்களின் விருப்பமாக பழைய பாடல் தரப்பட்டு இருக்கிறது. இனியும் பழைய பாடல்கள் நிறைய தரவிருக்கிறோம், தங்கள் ஆதரவிற்கு நன்றி..
திரைப்படம்: பத்ரகாளி (1976)
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: வாலி
கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூன்க்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக்
கொண்டு வரும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ
(கண்ணன்)
உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும்தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ
ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தம்மம்மா
வாழ்ந்திருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா
அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது
காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா
மஞ்சள் கொண்டு நீராடி
மைகுழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக் கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா
(கண்ணன்)
Labels: இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், பி. சுசீலா