பாலும் பழமும்

படம் பாலும் பழமும்
இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர் பி. சுசீலா
இசை பல்லவி

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
உன் இறைவன் அவனே அவனே
என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
என்னும் தாயின் மொழி கேட்டேன்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

இசை சரணம் - 1

இளகும் மாலை பொழுதினிலே
என் இறைவன் வந்தான் தேரினிலே
ஏழையின் இல்லம் இது என்றான்
இரு விழியாலே மாலையிட்டான்
இரு விழியாலே மாலையிட்டான்

இறைவன் அவனே அவனே
என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
என்னும் தாயின் மொழி கேட்டேன்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

இசை சரணம் - 2

காதல் கோயில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாரும் அறியா பொழுதினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே
அடைக்கலம் ஆனேன் முடிவினிலே

இறைவன் அவனே அவனே
என பாடும் மொழி கேட்டேன்
உன் தலைவன் அவனே அவனே
என்னும் தாயின் மொழி கேட்டேன்

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்
அருள் மொழி கூறும் பறவைகள் ஒலி கேட்டேன்

( இசை )

ம்... ம்... ம்... ம்... ம்... ம்...

0 comments: