படம் : மௌனம் சம்மதம்
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ் & சித்ரா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தென்பாண்டிக் கூடலா
தேவாரப் பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
என் அன்புக் காதலா
என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய்
வா வா நிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதிக் கூண்டிலா
சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
தேனூறும் வேர் பலா
உன் சொல்லிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
கல்யாண தேன் நிலா காய்ச்சாத பால் நிலா
Posted by KAJA MOHIDEEN ISAIANBAN at Saturday, February 05, 2011Labels: இளையராஜா, கே.ஜே.யேசுதாஸ், சித்ரா, பாடல் வரிகள், மம்முட்டி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment