கண்ணன் ஒரு கைக்குழந்தை

திரைப்படம்: பத்ரகாளி (1976)
இசை: இளையராஜா
பாடியவர்: ஜேசுதாஸ், பி. சுசீலா
இயற்றியவர்: வாலி



கண்ணன் ஒரு கைக்குழந்தை
கண்கள் சொல்லும் பூன்க்கவிதை
கன்னம் சிந்தும் தேனமுதைக்
கொண்டு வரும் என் மனதை
கையிரண்டில் நான் எடுத்து
பாடுகின்றேன் ஆராரோ
மைவிழியே தாலேலோ
மாதவனே தாலேலோ

(கண்ணன்)

உன் மடியில் நான் உறங்க
கண்ணிரண்டும்தான் மயங்க
என்ன தவம் செய்தேனோ
என்னவென்று சொல்வேனோ

ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தம்மம்மா
வாழ்ந்திருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா

அன்னமிடும் கைகளிலே
ஆடிவரும் பிள்ளை இது
உன்னருகில் நான் இருந்தால்
ஆனந்தத்தின் எல்லை அது

காயத்ரி மந்திரத்தை
உச்சரிக்கும் பக்தனம்மா
கேட்கும் வரம் கிடைக்கும் வரை
கண்ணுறக்கம் மறந்ததம்மா

மஞ்சள் கொண்டு நீராடி
மைகுழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும்போது
ஆசை வரும் ஒரு கோடி

கட்டழகன் கண்களுக்கு
மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக் கூடுமென்று
பொட்டு ஒன்று வைக்கட்டுமா

(கண்ணன்)

0 comments: