மன்மத லீலையை வென்றார் உண்டோ

திரைப்படம் : ஹரிதாஸ்
பாடல் : மன்மத லீலையை வென்றார் உண்டோ
பாடகர்கள் : தியாகராஜ பாகவதர்
இசை : ஜி. ராமநாதன்




மன்மத லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ

நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
( ரம்பா….. சுவாமி ..)
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
நின் மதி வதனமும்…
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் … நான்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
மன்மத லீலையை வென்றார் உண்டோ

என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ
என்னுடனே நீ பேசினால் வாய்
முத்து சிந்தி விடுமோ
உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ…
உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்
வந்தால் மெனக்கெடுமோ
உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ….
உன்னை நினைந்து நான் தேடி ஓர் முத்தம்
தந்தால் குறைந்திடுமோ
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ
ஒரு பிழை அறியா என் மனம்
மலர்கணை பாய்ந்து அல்லல் படுமோ – மனங்கவர்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ பாராமுகம்
மன்மத லீலையை வென்றார் உண்டோ
--------------------------

நேயர் விருப்பம் பகுதியில் பழைய தமிழ் பாடல்கள் கேட்டிருந்த இனிய நண்பர் U2ameer அவர்களின் விருப்பமாக மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற இந்தப் பாடல் தரப்பட்டு இருக்கிறது. தங்கள் ஆதரவிற்கு நன்றி..

3 comments:

marimuthu said...

அருமையான பாடல்,எனக்கு ரசிகன் ஒரு ரசிகை படத்தில் ஏசுதாசின் ஏழிசை கீதமே என்ற பாடல் வேண்டும்.தருவீர்களா....?

PALANI PN said...

மிகவும் மனம் கவர்ந்த பாடல். என்ன ராகம்?

Unknown said...

சாருகேசி ராகத்தில் பாகவதர் பாடிய இந்தப் பாடல் அவர் அவர் பாடி இருக்கின்ற அந்த ஸ்கேல் இனி எவராலும் முடியாது நான் ஆர்மோனியப் பெட்டியில் பாடி அவர் பாடி அந்த ஸ்கேல் என்னால் தொட முடியவில்லை 🙏