கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

பாடல் : கண்ணுக்குள் நூறு நிலவா
படம் : வேதம் புதிது
பாடகர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா
இசை : தேவேந்திரன்
பாடலாசிரியர்கள் : வைரமுத்து



பெண் : ப ப

ஆண் : தா தா

பெண் : நி நி

ஆண் : ச ச

பெண் : நி நி நி த ப ம க ரி ஸ நி

ஆண் : க ப ரி ஸ நி ரி க ம ப

பெண் : க ப ரி ஸ நி ரி க ம ப

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 1

பெண்குழு : அம்பா சாம்பவி சந்தரா மெளலி
ரகல பத்நா உமா பார்வதி
காளி வைபவதி சிவாத்ரி நயனா
காத்யயினி பைரவி சாவித்ரி
நவ யெளவன சுப ஹரி
சாம்ராஜ்ய லஷ்மி ப்ரதா...

ஆண் : தென்றல் தொட்டதும் மொட்டு வெடித்தால்
கொடிகள் என்ன குற்றம் சொல்லுமா

பெண் : கொல்லை துளசி எல்லை கடந்தால்
வேதம் சொன்ன சட்டங்கள் விட்டு விடுமா

ஆண் : வானுக்கு எல்லை யார் போட்டது
வாழ்கைக்கு எல்லை நாம் போட்டது

பெண் : சாஸ்திரம் தாண்டி தப்பி செல்வதேது

ஆண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

(இசை) சரணம் - 2

பெண்குழு : பூவே பெண் பூவே இதில் அதிசயம்
இளமையின் அவசியம் இனி என்ன ரகசியம்
இவன் மனம் புரியாலயா

பெண் : ஆணின் தவிப்பு அடங்கிவிடும்
பெண்ணின் தவிப்பு தொடர்ந்து விடும்

ஆண் : உள்ளம் என்பது உள்ள வரைக்கும்
இன்ப துன்பம் எல்லாமே இருவருக்கும்

பெண் : என்னுள்ளே ஏதோ உண்டானது
பெண்ணுள்ளம் இன்று ரெண்டானது

ஆண் : ரெண்டா ஏது ஒன்று பட்ட போதும்

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா
கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா

நாணம் விடவில்லை தொடவில்லை
ஏனோ விடையின்னும் வரவில்லை

ஆண் : ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தாண் வார்தை வருமா
ஐய்யர் வந்து சொல்லும் தேதியில்தான்வார்தை வருமா

பெண் : கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா

ஆண் : கைகுட்டை காதல் கடிதம் எழுதிய உறவா...

0 comments: